வயதைக் கண்டுபிடிக்க சுலப வழி

86
Advertisement

ஆண்களோ பெண்களோ எவரும் தங்களின் வயதை
சட்டென்று சொல்ல மாட்டார்கள். பலர் வயது அதிகமாக
இருந்தாலும் தோற்றத்தில் இளமையாக இருப்பார்கள்.
அதனால் இந்தக் கால இளைஞர்களுக்கும் 80 கிட்ஸ்களுக்கும்
ஒரு போட்டியே இருக்கும்… யார் இளைஞரா இருக்காங்கன்னு-…

ஆனால், ஒருவரின் வயதை சுலபமாக கண்டுபிடிக்க
ஒரு ஜாலியான வழியை நாங்க கண்டுபிடிச்சிருக்கோம்…
யாராவது அவங்களின் வயதை உங்களிடம் மறைத்தால்,
இந்தக் கேள்விகளை அவங்களிடம் தைரியமாகக் கேளுங்கள்….

இந்தக் கேள்விகளைக் கேட்டு அவர்கள் சொல்லும் பதிலைக்கொண்டே
உண்மையான வயதைத் தெரிந்துகொள்ளலாம்.

Advertisement

வீடியோ கேசட் பிளேயர் VCP வாடகைக்கு எடுத்து
வீடியோ கேசட்ல விடியவிடியப் படம் பாத்தவனா நீ?

டிவி சேனலை சுவிட்சைத் திருப்பி சேனலை மாத்துனவனா நீ?

ஆடியோ கேசட் சிக்கலை Reynolds பேனாவை வைச்சி
சுத்தி சுத்தி சரிசெஞ்சவனா நீ?

போன் நம்பரை டயலைச் சுத்திப் போன் செஞ்சவனா நீ?

ராமராஜனின் மாங்குயிலே பூங்குயிலே பாட்டை ரொம்ப
ரசிச்சவனா நீ?

வெள்ளிக்கிழமை கூட்டத்தோடு கூட்டமா நின்னு ஒலியும்
ஒளியும் பாத்தவனா நீ?

இந்தக் கேள்விகள் அனைத்துக்கும் ஆமாம்னு பதில் சொன்னேன்னா…
.
.
.
.
உனக்கு 45 வயசுக்கு மேல ஆயிடுச்சு-.. ஒழுங்கா ஆஸ்பிட்டலுக்குப்
போய்க் கொரோனோ தடுப்பூசியைப் போடு

அப்படின்னு சொல்லிடுங்க…
இனிமே உங்ககிட்ட வயச மறைக்க மாட்டாரு.
உங்களக் கண்டாலே தலைதெறிக்க யப்பா ஆள விடு
எனக்கு வயசாயிடுச்சுன்னு உண்மைய ஒப்புக்கொண்டு ஓடிருவாரு-..