கொண்டாட ஒரு செயற்கைத் தீவு

188
Advertisement

நான்குபுறமும் நீர் சூழ்ந்திருக்க நடுவில் நிலப் பரப்பு
இயற்கையாக அமைந்திருப்பதைத் தீவு என்ற அழைப்போம்.
இத்தகைய தீவுகள் சிறந்த சுற்றுலாத் தலமாகத் திகழும்.
நன்கு வருவாயையும் ஈட்டித் தரும்.

இதேபோன்று செயற்கையான
தீவு ஒன்றை பத்தாண்டுகளுக்கு முன்பே துபாய் உருவாக்கி
சாதனை படைத்துள்ளது.

பனை மரத் தீவுகள் என்ற அழைக்கப்படும் இந்தப்
பகுதி உருவாக்கப்பட்டது பற்றி சில சுவாரசியமான
தகவல்களை அறிந்துகொள்வோம்.

பாம் ஜுமேரா என்னும் பெயரில் உருவாக்கப்பட்டுள்ள
இந்தத் தீவு 2009ல் கட்டிமுடிக்கப்பட்டது. மணல் அரிப்பு
ஏற்பட்டு இந்தத் தீவு பாதிக்கப்படாத வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

கடற்கரையிலிருந்து ஒன்றரை கிலோமீட்டர் தொலைவில்,
கடலுக்குள் பத்தரை மீட்டர் ஆழத்துக்குப் பாறைகளும்,
மணலும் கொட்டப்பட்டு மேடாக்கப்பட்டு, அதன் இருபுறமும்
பிறை வடிவில் இங்கு வரிசையாகக் கட்டடங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

இந்தத் தீவைப் பார்ப்பதற்கு பனை மரம் போன்று உள்ளது.
விமானத்தில் பறக்கும் போதுதான் இந்தப் பனை மர வடிவைப்
பார்க்க முடியும்.

இந்த செயற்கைத் தீவில் பல வகையான வீடுகளும் உண்டு.
ஓட்டல்களும் உண்டு. வணிக நிறுவனங்கள், ஷாப்பிங்
மால்கள் ஆகியவற்றோடு பொழுதுபோக்கக் கடற்கரையும்
உண்டு.

ஒன்பது ஆண்டுகளில் உருவாக்கப்பட்ட இந்த தீவைப் பார்க்க
வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் அதிக எண்ணிக்கையில்
வந்தவண்ணம் உள்ளனர்.

இந்தப் பனை மரத் தீவில் 500க்கும் மேற்பட்ட குடும்பங்களும்,
10 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் வாழ்ந்து வருவதாகக்
கூறப்படுகிறது.

கோடைக்காலத்தில் இந்தத் தீவைச் சுற்றி ஜெல்லி மீன்கள்
வந்துசெல்கின்றனவாம். இதைப் பார்த்து ரசிக்கவே சுற்றுலாப்
பயணிகள் கணிசமான எண்ணிக்கையில் வருகை தருகின்றனர்.
இவர்களுக்காகவே 28க்கும் மேற்பட்ட ஹோட்டல்கள் உள்ளன.

பிறைவடிவிலான தீவுகள் மட்டும் 11 கிலோமீட்டர் நீளமுடையவை.
இவற்றுக்குள் சென்றுவர சுரங்கப் பாதையும் அமைத்திருக்கிறார்கள்.
இந்தத் வட்டவடிவிலுள்ள இந்தத் தீவைச் சுற்றி 5 கிலோமீட்டர், 400 மீட்டர்
தூரத்துக்கு மோனோ ரயில் பாதையும் அமைக்கப்பட்டுள்ளதாம்.

நிலப்பகுதியையும் இந்தத் தீவையும் இணைக்கும் வகையில்
இங்கு மோனா ரயில் இயக்கப்படுகிறதாம்.

துபாய் விமான நிலையத்திலிருந்து அரை மணி நேரத்தில்
இந்த செயற்கைத் தீவுக்கு வந்துவிடலாமாம்.