மாதம் 75 ஆயிரம் ரூபாய் சம்பாதிக்கும் ஒரு வயதுக் குழந்தை

267
Advertisement

ஒரு வயதுக் குழந்தை மாதம் 75 ரூபாய் சம்பாதிக்கும் விஷயம் இணையத்தில் வைரலாகியுள்ளது.

கொரோனா ஊரடங்கு காலத்தில் பலரின் திறமையை வெளியுலகுக்குத் தெரியப்படுத்துவதில் சமூக வலைத்தளங்கள் முக்கியப் பங்காற்றின. அந்த வகையில், இன்ஸ்டாகிராமில் பதிவிடப்பட்டுள்ள வீடியோ ஒன்றின்மூலம் வெளியுலகுக்குத் தெரியவந்துள்ள குழந்தையின் திறமை அனைவருக்கும் ஆச்சரியமாகவும், பலருக்கும் வழிகாட்டியாகவும் உள்ளது.

பிரிக்ஸ் என்னும் ஒரு வயதுக் குழந்தை அமெரிக்காவில் பயணம் செய்வதன்மூலம் மாதம் ஆயிரம் டாலர் சம்பாதிக்கிறது. இது இந்திய மதிப்பில் 75 ஆயிரம் ரூபாய்க்கு சமம். இந்தக் குழந்தையின் இன்ஸ்டாகிராம் கணக்கை 30 ஆயிரம்பேர் பின்தொடர்வதன் மூலம் விரைவில் புகழ்பெற்றுள்ளது.

இந்தக் குழந்தையின் தாயான ஜெஸ் தனது திருமணத்துக்குமுன்பு பகுதி நேர சுற்றுலாப் பயணிகள் என்கிற வலைத்தளக் கணக்கைத் தொடங்கி அதன்மூலம் சம்பாதிக்கத்தொடங்கினார். அதில் கிடைத்த பணத்தைக்கொண்டு உலகம் முழுவதும் சுற்றுலா செல்லத் தொடங்கினார்.

திருமணம் முடிந்ததும் தனது சுற்றுலாப் பயணம் முடிந்துவிடுமென்று கருதினார் ஜெஸ். அப்போது ஜெஸ்க்கு ஒரு யோசனை தோன்றியுள்ளது. உடனே குழந்தைகள் பயணம் பற்றிய சமூக வலைத்தளங்கள் ஏதாவது உள்ளதா என்று தேடத் தொடங்கினார். ஆனால், அப்படி ஒரு வலைத்தளக் கணக்கும் இல்லையென்பதைக் கண்டார்.

உடனடியாக, தனது கணவருடன் சேர்ந்து குழந்தைகளுடன் பயணிக்கும் பெற்றோர்களுக்குப் பயன்படும் வகையில் ஒரு வலைத்தளக் கணக்கைத் தொடங்கினார். குழந்தை பிறந்த பின்பு கணவர், குழந்தையோடு சுற்றுலா செல்வதைத் தொடர்ந்தார். அந்த வீடியோக்களை குழந்தையின் பெயரில் தொடங்கப்பட்ட இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிடத் தொடங்கினார்.

2020 ஆம் ஆண்டு அக்டோபர் 14 ஆம் தேதி ஜெஸ்க்கு குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்தது முதல் அலாஸ்கா, கலிபோர்னியா, புளோரிடா, உட்டா, இடாஹோ உள்ளிட்ட அமெரிக்காவின் 16 மாநிலங்களுக்கு 45 அமெரிக்க விமானங்களில் சுற்றுப் பயணம் மேற்கொண்டார்.

கரடிகளைப் பார்க்க அலாஸ்காவுக்கும் ஓநாய்களைப் பார்க்க எல்லோ ஸ்டோன் தேசியப் பூங்காவுக்கும், நுண்ணிய வளைவைப் பார்க்க உட்டாவுக்கும், கடற்கரையைக் கண்டுகளிக்க கலிபோர்னியாவுக்கும் சென்றார்.

அங்கெல்லாம் குழந்தையோடு சென்றதை வீடியோ எடுத்து குழந்தையின் பெயரில் தொடங்கப்பட்ட இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டதுடன், குழந்தையோடு சுற்றுலா சென்ற அனுபவங்களையும் பதிவிட்டு வந்தார். இது பல பெற்றோருக்கும் மிகவும் பயனுள்ளதாகஅமைந்தது.

இதனால் குழந்தை பிரிக்ஸின் இன்ஸ்டாகிராம் பக்கத்தைப் பின்தொடர்வோரின் எண்ணிக்கை அதிகரித்தது. அந்த வகையில் வருமானமும் வரத்தொடங்கியது.

ஒரு வயதுக்குள்ளாகவே அதிகமாக சம்பாதிக்கத் தொடங்கிய குழந்தை உலகிலேயே பிரிக்ஸ் ஆகத்தான் இருக்கும்.