மகா சிவராத்திரி விழாவில் பங்கேற்பதற்காகவும் மாவட்ட பாஜக அலுவலகத்தை திறப்பதற்காகவும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாளை கோவை வருகிறார்.
இந்நிலையில் கோவை பீளமேட்டில் உள்ள பாஜக புதிய அலுவலகம் அருகே வைக்கப்பட்டிருந்த பதாகைகளை மாநகராட்சி ஊழியர்கள் அகற்றி குப்பையில் போட்டனர்.
இதையடுத்து பாஜகவினர் கோவை பீளமேடு காவல் நிலையம் முன்பு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் மாநகராட்சியை கண்டித்து சாலை மறியல் ஈடுபட்டனர்.