Friday, May 9, 2025

அண்ணாமலைக்கு முக்கிய பொறுப்பை வழங்கிய அமித்ஷா

தமிழக பாஜகவின் புதிய தலைவராக நயினார் நாகேந்திரன் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். நாளை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகிறது. இதன் காரணமாக தமிழ்நாடு பாஜகவின் மாநிலத் தலைவர் அண்ணாமலை பொறுப்பிலிருந்து விடைபெறுகிறார்.

இந்நிலையில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா எக்ஸ் தள பதிவில் கூறியதாவது:- தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை அளித்த பங்களிப்பு பாராட்டத்தக்கது. அண்ணாமலை தேசிய பொறுப்புக்கு செல்கிறார். பாஜகவின் தேசிய பணிகளுக்கு அண்ணாமலையின் திறமை பயன்படுத்தப்படும் என பதிவிட்டுள்ளார்.

Latest news