அமெரிக்காவின் அலாஸ்கா மாநிலத்தில் அமெரிக்காவின் அலாஸ்கா மாநிலத்தில் -40°C வெப்பநிலையிலும் உயிருடன் காணப்படும் ஒரு அதிசயமான உயிரினம் உயிருடன் காணப்படும் ஒரு அதிசயமான உயிரினம் கண்டறியப்பட்டுள்ளது. “குளேஷியர் ஐஸ் வர்ம்” (Glacier Ice Worm) எனப்படும் இச்சிறிய புழு தற்போது அறிவியல் உலகில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.
பனிப்பாறைகளின்களின் அடிப்பகுதிகளில் வாழும் இந்த உயிரினம், ஈரப்பதமற்ற சூழ்நிலைகளிலும் தன்னைச் சீராகப் பராமரிக்கும் திறனை கொண்டது. ஆய்வுகளின் படி, Glacier Ice Worm பெரும்பாலும் பனிக்கட்டிகளின் மேற்பரப்பிலும், அதன் அருகிலுள்ள நீர்நிலைகளிலும் இயங்குகிறது. இவை பனியின் ஆழத்திலும் சுலபமாகச் சுழலும் தன்மை கொண்டவை.
அதிசயமாக, இந்த உயிரினம் வாழக்கூடிய வெப்பநிலையின் வரம்பு மிகவும் குறைவானது. அதிகபட்சமாக 6.8°C வரை மட்டுமே உயிருடன் நிலைத்து இருக்கும் என கண்டறியப்பட்டுள்ளது. இதற்கு மேலோ, அதற்குக் கீழோ வெப்பநிலை மாறும்போது, புழுவின் உடல் அமைப்பு சீர்குலைந்து உயிரிழக்கிறது.
மேலும், வெப்பநிலை 5°C-ஐத் தாண்டினால், இதன் உடல் அமைப்பு உருகி கரைந்துவிடும். அதனால், இந்த உயிரினம் இயற்கையின் உறைந்த சூழலில் மட்டுமே வாழ முடிகிறது.
இந்த கண்டுபிடிப்பு, ‘அதிகப்படியான குளிர் சூழ்நிலைகளிலும் உயிர் நிலைத்திருக்கும் திறன்’ குறித்த அறிவியல் ஆராய்ச்சிக்குப் புதிய வழிவகை அமைத்துள்ளது. இதன் மரபணு அமைப்பு, வாழ்க்கை முறை மற்றும் உறைந்த சுற்றுச்சூழலோடு உள்ள தொடர்புகள் குறித்து மேலும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இத்தகைய அரிய உயிரினங்களைப் பாதுகாப்பதும், அவற்றின் உயிரியல் முக்கியத்துவத்தை உணர்வதும், பனிப்படலங்கள் மற்றும் இயற்கைச் சூழலின் நிலைத்தன்மைக்குப் பெரும் அவசியமானதாகும்.
