அமெரிக்காவை சேர்ந்த மார்கரெட் காலருக்கு இப்போது நூறாவது கொள்ளுப்பேரக்குழந்தை பிறந்துள்ளது.
99 வயதாகும் மார்கரெட்டுக்கு 11 பிள்ளைகள், 56 பேரக்குழந்தைகள் மற்றும் 100 கொள்ளுப் பேரப்பிள்ளைகள் உள்ளனர்.
தனியாக இருக்கும் குழந்தைகளின் மனநலம் பாதிக்கப்படும் என்பதால் பெரிய குடும்பத்தை உருவாக்க நினைத்ததாக மார்கரெட் நேர்காணல் ஒன்றில் பகிர்ந்துள்ளார். 1922ஆம் ஆண்டில் பிறந்த மார்கரெட் இன்னும் சில மாதங்களில் தன்னுடைய நூறாவது பிறந்தநாளை கொண்டாட உள்ளது குறிப்பிடத்தக்கது.