கடலை அதிர வைத்த அமெரிக்கா!

206
Advertisement

ஆச்சரியமாக இருக்கிறதா…. உண்மைதான்.
புளோரிடா மாகாணத்தின் டேடோனா கடற்கரையிலிருந்து
100 மைல் தொலைவிலுள்ள அட்லாண்டிக் பெருங்கடலில் 20 டன்
எடைகொண்ட வெடிகுண்டை வெடிக்கச் செய்து அதிரடி
காட்டியுள்ளது அமெரிக்கக் கடற்படை இதனை அமெரிக்கக்
கடற்படை தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

இந்த வெடிப்பைத் தொடர்ந்து 3.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்
ஏற்பட்டுள்ளது. இந்த சோதனைக்கு 40 ஆயிரம் பவுண்ட் எடைகொண்ட
வெடிமருந்துகள் பயன்படுத்தப்பட்டுள்ளது.

எதற்காக இந்த சோதனை?

Advertisement

அமெரிக்கக் கடற்படையின் புதிய போர்க்கப்பல்களின் வடிவமைப்பை
சரிபார்க்கவும், நீருக்கடியில் வெடிபொருட்களுக்கு எதிரான கப்பல்களின்
உறுதித்தன்மையை அறிந்துகொள்ளவும் இந்த சோதனை நிகழ்த்தப்பட்டதாகக்
கூறப்படுகிறது.

அமெரிக்கக் கடற்படையின் விமானம் தாங்கிக் கப்பலான USS Gerald
R Ford (CVN 78) இந்த சோதனையின்போது பயன்படுத்தப்பட்டுள்ளது.

இந்த சோதனையை வலைத்தளவாசிகள் விமர்சித்து வருகின்றனர். கடல்ல
எத்தனைகோடி ஜீவன்கள் வாழ்கின்றன. அதப்பத்தியெல்லம் கவலப்படாம
இந்த சோதனய நீங்க நடத்தியிருக்கீங்க.

ஒருவேளை உயிரினங்கள் இல்லாத இடத்தில் இந்த சோதனை நடத்தப்பட்டதா
என்பது தெரியவில்லை. பல்வேறு தரப்பினரும் இந்த சோதனையைப்
பற்றிவிமர்சித்து வருகின்றனர்.

இது முதல் சோதனைதானாம். அப்படியெனில் இன்னும் எத்தனை சோதனைகளோ…

பயத்தில் உறைந்துகிடக்கிறது உலகம்.