கோழியைத் தேடிய அமெரிக்காவின் செயல் இணையத்தில் வைரலாகி வருகிறது.
பொதுவாக, அதிகமாகத் தேடப்படும் குற்றவாளிகள், பழக்கவழக்கம், சட்டத்தை
மீறுபவர்களைத் தேடித்தான் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருக்கும். ஆனால், எப்போதாவது
தங்கும் கோழிக்கான most wanted அறிவிப்பைப் பார்த்திருக்கிறீர்களா?
அமெரிக்காவின் இண்டியானா மாகாணத்திலுள்ள சார்லஸ் டவுனின் நகராட்சி அலுவலகத்தின்
அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில், கடந்த செவ்வாய்க் கிழமை அதாவது, ஏப்ரல் 26 ஆம் தேதி
சார்லஸ் டவுனின் நகராட்சி அலுவலகத்தின் ஃபேஸ்புக் பக்கம் கோழியின் snap shotகளைக்
கொண்ட தேடப்படும் போஸ்டரைப் பகிர்ந்துள்ளது. அந்தப் போஸ்டரில், நீங்கள் இந்தக் கோழியைக்
காயம் அடைவதற்கு முன்போ பொரிக்கப்படுவதற்கு முன்போ பார்த்திருக்கிறீர்களா?
கோழி இருக்குமிடம் பற்றித் தகவல் தெரிந்தால் உடனடியாகத் தகவல் தெரிவிக்கவும். கோழியைக்
கண்டால் விலங்குகள் கட்டுப்பாட்டுத்துறையுடன் தகவல்களைப் பகிர்ந்துகொள்ளுமாறும், தாங்களாகவே
பிடிக்க வேண்டாம் என்றும் மக்களைக் கேட்டுக்கொண்டது.
இந்த லுக் அவுட் நோட்டிஸ், அதாவது, கவன ஈர்ப்பு சுற்றறிக்கை வெளியிடுவதற்குமுன் நகரம் முழுவதும்
இந்தக் கோழி சுற்றித் திரிந்துள்ளது.
இந்தத் தகவல் விரைந்து பரவியது. அதைத்தொடர்ந்து மறுநாளே மரங்கள் நிறைந்த பகுதியில்
இருந்த மோஸ்ட் வான்டட் கோழி பிடிபட்டுவிட்டது.
தற்போது நியூவாஷிங்டன் அனிமல் சர்வீசஸ் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டு ஆரோக்கியமாகவும்
பாதுகாப்பாகவும் உள்ளது.