Saturday, January 17, 2026

உ.பி.யில் அம்பேத்கர் சிலை உடைப்பு : கிராம மக்கள் போராட்டம்

உத்தரபிரதேச மாநிலம், சக்கோதார் கிராமத்திலுள்ள அசோகா தூண் மற்றும் அம்பேத்கர் சிலைகள் அமைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில் நேற்று மர்ம நபர்கள் சிலர் அங்கிருந்த அம்பேத்கர் சிலையை உடைத்து சேதப்படுத்தியுள்ளனர்.

இந்த செய்தியை அறிந்த அந்தக் கிராமத்தைச் சேர்ந்த உள்ளூர்வாசிகள் ஏராளமானோர் பூங்காவின் அருகில் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், தகவலறிந்து அங்கு விரைந்த காவல் துறை உயர் அதிகாரிகள், கிராம மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி அம்பேத்கரின் புதிய சிலை அங்கு நிறுவப்படும் என உறுதியளித்தனர். இதனால், அங்கு போராட்டம் கைவிடப்பட்டு மக்கள் கலைந்து சென்றனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Related News

Latest News