சென்னை வானில் ஏலியன் ENTRY PORTALஆ? அதிர்ச்சியில் உறைந்த மக்கள்! பரபரப்பு விளக்கம்

170
Advertisement

ஏலியன்கள் இருக்கிறார்களா? இல்லையா? என்பது பதில் சொல்ல முடியாத ஒரு மில்லியன் டாலர் கேள்வியாகும்.  

ஏலியன்களை பற்றிய தேடலும் சுவாரஸ்யமான கதைகளும் மனிதனை இன்னும் வியப்படைய வைத்து கொண்டே தான் இருக்கின்றது. இந்நிலையில், சென்னை அருகே வானில் காணப்பட்ட வட்ட வடிவ மேகத்தை பார்த்து, இது ஏலியன் என்ட்ரி போர்ட்டலாக இருக்குமோ என மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

தமிழ்நாட்டின் வட மாவட்டங்களில் பல்வேறு பகுதிகளிலும் இந்த விசித்திர மேகம் தென்பட்டதாக கூறப்படுகிறது. ராணிப்பேட்டை, திருத்தணி, சோளிங்கர், வேலூர் போன்ற இடங்களில் இந்த மேகம் காணப்பட்டுள்ளது. பூமிக்கு மிக அருகில் உள்ள காற்றடுக்கான ட்ரோபோஸ்பியர் அடர்த்தி குறைவான வளிமண்டல பகுதியாக உள்ளது.

16 கிலோமீட்டர் மட்டுமே தூரம் உள்ள இந்த மண்டலத்தில் உருவாகும் மேகங்கள் விநோதமான தோற்றத்தை பெறுகிறது. மலைப்பகுதிகளில் உருவாகும் இவ்வகை மேகங்கள் லென்டிகுலர் மேகங்கள் என அழைக்கப்படுகிறது. இந்த வேகத்தில் காற்றடித்து மேகம் கலையாது என்பதால், இது போன்ற உருவங்கள் காணப்படுகிறது. லென்டிகுலர் மேகங்களின் வித்தியாசமான தோற்றங்கள்தான் பறக்கும் தட்டு, ஏலியன் போர்ட்டல் போன்ற வடிவத்தை நமக்கு நினைவூட்டுவதாக வானியல் நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.