Thursday, March 27, 2025

கெட்டுப்போன குளிர்பானம் : ஆல்பர்ட் திரையரங்க கேன்டீன் உரிமம் ரத்து

சென்னை கொளத்தூரைச் சேர்ந்த நித்யா என்பவர் நேற்று மாலை எழும்பூர் ஆல்பர்ட் திரையரங்கில் படம் பார்க்க வந்துள்ளார். இடைவேளை நேரத்தில் தியேட்டர் கேண்டினில் குளிர்பானம் வாங்கியுள்ளார். அந்த குளிர்பானம் காலாவதி ஆகி உள்ளதை பார்த்த அவர் சம்பந்தப்பட்டவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

இந்த சம்பவம் குறித்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் கேன்டீன் உரிமம் ரத்து செய்யபட்டுள்ளது. மேலாளர் மீது நடவடிக்கை எடுக்க உணவு பாதுகாப்புத்துறை உத்தரவிட்டுள்ளனர்.

Latest news