முதல் காட்சியை கைப்பற்றிய துணிவு! வாரிசுக்கு வந்த புதிய சிக்கல்

126
Advertisement

விஜய் அஜித்தின் படங்கள் ஒரே சமயத்தில் தயாராக தொடங்கியதில் இருந்தே பல போட்டிகளும் அதனால் கிளம்பும் குழப்பங்களும் தொடர்ந்து கொண்டே தான் உள்ளன.

விஜயின் வாரிசு மற்றும் அஜித்தின் துணிவு படங்கள் ஒரே நாளில் திரையரங்குகளில் வெளியாகும் என்ற அறிவிப்புக்கு பின்னும் பரபரப்பு ஓய்ந்த பாடில்லை.

காரணம், விஜய் அஜித் படங்களை ஒரே நேரத்தில் வெளியிட்டால் சிறப்பு கட்சிகளின் போது, இரு தரப்பு ரசிகர்களிடையே மோதல் ஏற்பட வாய்ப்பு இருப்பதால், நேர மாற்றம் வேண்டும் என்பதே திரையரங்கு உரிமையாளர்களின் வாய்மொழி கோரிக்கையாக இருந்து வந்தது.

இதையடுத்து, எந்த படம் முதலில் வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்தது. இந்நிலையில், ஜனவரி 11ஆம் தேதி 1 மணிக்கு துணிவு படத்தையும், அதிகாலை நான்கு மணிக்கு வாரிசு படத்தின் சிறப்பு காட்சியையும் திரையிட, திரைப்பட விநியோக நிறுவனங்கள் முடிவெடுத்துள்ளன.

இரு படங்களுக்கான போட்டியில் முதலில் ரிலீஸ் ஆகும் படத்துக்கு வசூலில் முந்த வாய்ப்பு அதிகம் என்பதால், இந்த நகர்வு வாரிசு படத்துக்கு சற்றே பின்னடைவாக பார்க்கப்படுகிறது.