அடுத்தடுத்த சிக்கலில் அஜித்! அதிர்ச்சியில் ரசிகர்கள்

155
Advertisement

அஜித் எச்.வினோத்தின் மூன்றாவது முறை கூட்டணி படமான ‘துணிவு’ ஹிட் அடிக்க, 2022ஆம் ஆண்டு அதே இயக்குநர் இயக்கிய படத்தால் அஜித்துக்கு புதிய பிரச்சினை கிளம்பியுள்ளது.

படம் வெளியாகி கிட்டத்தட்ட ஒரு வருடம் ஆகும் நிலையில் குறும்பட இயக்குநர்  ராஜேஷ் ராஜா, ‘வலிமை’ படக்குழுவினர் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

2019ஆம் ஆண்டு தான் இயக்கிய ‘தங்க சங்கிலி’ என்ற குறும்படத்தில் இருந்து பத்திற்கும் மேற்பட்ட காட்சிகளின் தழுவலாக ‘வலிமை’ பட காட்சிகள் அமைந்திருப்பதாக ராஜேஷ் புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இந்த விவகாரம் தொடர்பாக பேச எச்.வினோத்தை சந்திக்க பல முறை முயற்சித்தும் பலன் இல்லாமல் போகவே, இந்த முடிவை கையிலெடுத்துள்ளதாக ராஜேஷ் தெரிவித்துள்ளார். குறும்பட இயக்குநரின் புகார் சம்பவம் சினிமா வட்டாரங்களில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது