1 மணி நேரத்தில் துணிந்து 15 மணி நேரத்தில் பணிந்த ‘சில்லா சில்லா’!

470
Advertisement

தமிழ் சினிமாவில் எப்போதுமே எதிரெதிர் துருவங்களாக பார்க்கப்படும் விஜய் மற்றும் அஜித்தின் ரசிகர்கள்  முன்னெப்போதும் இல்லாத அளவில் மோதல் போக்கில் ஈடுபட்டு வருகின்றனர்.

காரணம், எட்டு வருடங்களுக்கு பிறகு ஒரே சமயத்தில் ரிலீஸ் ஆகும் ‘வாரிசு’ மற்றும் ‘துணிவு’ படங்கள் தான்.

‘வாரிசு’ படக்குழுவினர் ‘ரஞ்சிதமே’ மற்றும் ‘தீ தளபதி’ பாடல்களும் ஏற்கனவே ரிலீஸ் செய்யப்பட்ட நிலையில், அண்மையில் வெளியான ‘துணிவு’ படத்தின் ‘சில்லா சில்லா’ பாடலும் நல்ல வரவேற்பை பெற்று ட்ரெண்டிங்கில் முன்னிலை பெற்றுள்ளது.

‘ரஞ்சிதமே’ பாடல் வெளியாகி ஒரு மணி நேரத்தில் 5 லட்சம் லைக்குகளை பெற்ற நிலையில் ‘சில்லா சில்லா’ பாடல் 47 நிமிடத்திலேயே இந்த சாதனையை முறியடித்தது. இதனால் குஷியடைந்த அஜித் ரசிகர்கள் ‘ரஞ்சிதமே’ சாதனையை ‘சில்லா சில்லா’ முறியடித்ததாக ட்விட்டரில் ட்ரெண்ட் செய்து வந்தனர்.

ஆனால், ஒரு மில்லியன் லைக்குகளை பெற ‘சில்லா சில்லா’ பாடல் 15 மணி நேரத்தை எடுத்துக்கொண்ட நிலையில் ‘ரஞ்சிதமே’ பாடல் வெளியான 4 மணிநேரம் 44 நிமிடங்களிலேயே 1 மில்லியன் லைக்குகளை பெற்றது குறிப்பிடத்தக்கது.