சேற்றுக்குள் ஜீப் ஓட்டிய அஜித் ???
வைரலாகும் வீடியோ

298
Advertisement

‘வலிமை’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானபோது பரபரப்பை ஏற்படுத்தியது.
அதில், POWER IS A STATE OF MIND என்ற வாசகம் இடம்பெற்றிருந்தது.
இதைப் பார்த்த தல ரசிகர்கள் உற்சாகத்தில் துள்ளிக்குதித்தனர்.

அந்தப் பரபரப்பு அடங்கும்முன்பே டீஸர் வெளியாகி பெரும் ஆவலை ஏற்படுத்தியது.

அதைத் தொடர்ந்து சேற்றுக்குள் ஜீப் ஓட்டும் அஜித் பற்றிய வீடியோ
வெளியாகி எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியது. பைக் ரேஸ் அதிகம்
உள்ளதாக நம்பப்பட்ட ‘வலிமை’ படத்தில் செம்மண் சகதி நிறைந்த
முள்பாதையில் தல ஜீப் ஓட்டி வருவது தல ரசிகர்களை உற்சாகத்தில்
திளைக்கச் செய்தது.

ஆனால், இது வலிமை படத்தில் இடம்பெற்றுள்ள காட்சியா அல்லது
எப்போதும்போல தல அஜித்தின் சாகஸப் பயணமா என்பது தெரியவில்லை.
இந்த வீடியோ அஜித் ரசிகர்களை மேலும் உற்சாகப்படுத்தியுள்ளது.

அஜித் என்றாலே வித்தியாசம்தானே… ஆனால், இந்த வீடியோவில்
உள்ள ஜீப் ஓட்டுபவர் நடிகர் அஜித் அல்ல என்பது தெரியவந்துள்ளது.
அஜித்தைப்போல் தோற்றம்கொண்ட ஒருவர்தான் இப்படி சகதிக்குள்
தாறுமாறாக ஜீப்பை ஓட்டியுள்ளார்.

தல ரேஸ் பிரியர் என்பதாலும், சாகஸப் பிரியர் என்பதாலும்
சட்டென்று இந்த வீடியோவை நம்பிவிட்டனர்.