2026 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் 19வது சீசன் மார்ச் 28 அன்று தொடங்குகிறது. இதனை முன்னிட்டு, Airtel தனது வாடிக்கையாளர்களுக்கும் கிரிக்கெட் ரசிகர்களுக்கும் சிறப்பு சலுகையாக புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டத்தில் குறைந்த விலையில் JioHotstar சப்ஸ்கிரிப்ஷன் நன்மையும் வழங்கப்படுகிறது.
ரூ.1029 திட்ட விவரம்
இந்த திட்டத்தின் விலை ரூ.1029 ஆகும். இதில் 84 நாட்கள் செல்லுபடியாகும் வேலிடிட்டி கிடைக்கும். இந்த காலப்பகுதியில் அனைத்து நெட்வொர்க்குகளுக்கும் அன்லிமிடெட் காலிங் வசதி வழங்கப்படுகிறது. தினமும் 100 இலவச SMS-களும் வழங்கப்படும்.
டேட்டா வசதியைப் பொறுத்தவரை, தினமும் 2GB அதிவேக இணைய டேட்டா வழங்கப்படுகிறது. மேலும், நீங்கள் 5G வசதி உள்ள பகுதியில் இருந்தால், அன்லிமிடெட் 5G டேட்டாவையும் பயன்படுத்த முடியும். இதனால் IPL போட்டிகளை எந்த இடையூறும் இல்லாமல் பார்க்கலாம்.
இந்த திட்டத்தின் முக்கிய சிறப்பம்சம் என்டர்டெயின்மென்ட் நன்மைகளாகும். இதில் 3 மாதங்களுக்கு JioHotstar சப்ஸ்கிரிப்ஷன் இலவசமாக வழங்கப்படுகிறது. இதன் மூலம் முழு IPL சீசனையும் நேரலையில் பார்க்க முடியும்.
மேலும், 12 மாதங்களுக்கு Adobe Express Premium சேவைக்கும் அணுகல் கிடைக்கும். இதைத் தவிர, இலவச ஹலோ ட்யூன்ஸ், ஸ்பேம் கால் மற்றும் மெசேஜ் அலர்ட்கள், Airtel Rewards போன்ற கூடுதல் நன்மைகளும் வழங்கப்படுகின்றன.
ரூ.449 திட்ட விவரம்
Airtel நிறுவனத்தின் குறைந்த விலை திட்டமாக ரூ.449 திட்டமும் வழங்கப்படுகிறது. இந்த திட்டம் 28 நாட்கள் செல்லுபடியாகும்.
இதில் தினமும் 4GB டேட்டா வழங்கப்படுகிறது. அதிக டேட்டா பயன்படுத்தும் பயனர்களுக்கு இது மிகவும் உகந்ததாகும். அதேபோல், அன்லிமிடெட் லோக்கல் மற்றும் STD கால்கள், தினமும் 100 SMS ஆகியவையும் வழங்கப்படுகின்றன.
இந்த திட்டத்தில் 28 நாட்களுக்கு JioHotstar மொபைல் சப்ஸ்கிரிப்ஷனும் கிடைக்கும். கூடுதலாக, SonyLIV உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட OTT தளங்களுக்கான அணுகலும் வழங்கப்படுகிறது. இதில் பல்வேறு என்டர்டெயின்மென்ட் தளங்களில் உள்ள உள்ளடக்கங்களை பார்க்கலாம்.
மேலும், Airtel Xstream Play மூலம் இந்த OTT சேவைகள் வழங்கப்படுகின்றன. இதனுடன் 12 மாதங்களுக்கு Adobe Express Premium நன்மையும் சேர்க்கப்பட்டுள்ளது.
மொத்தத்தில், இந்த இரண்டு திட்டங்களும் IPL சீசனை முழுமையாக அனுபவிக்க விரும்பும் பயனர்களுக்கு இவை சிறந்த தேர்வாக இருக்கும்.
