இந்தியர்களின் சராசரி ஆயுளை குறைக்கும் காற்று மாசு

297
Advertisement

அதிகரித்து வரும் காற்று மாசினால் இந்தியர்கள் சுவாசிக்கும் காற்றின் தரம் வெகுவாக குறைந்து வருவது, தொடர்ந்து  பல ஆய்வுகள் வழியே உறுதியாகி வருகிறது.

இந்நிலையில், அண்மையில் சிகாகோ வெளியிட்ட அறிக்கையில் வட இந்தியாவில் வாழும் 510 மில்லியன் மக்கள், தங்கள் சராசரி ஆயுளில் 7.6 வருடங்களை இழக்க போவதாக தெரிய வந்துள்ளது.

PM 2.5 என்னும் மாசு ஏற்படுத்தும் நுண்துகள் காற்றில் அதிகம் நிலவும்  பகுதிகளில் 1.3 பில்லியன் மக்கள் வரை வாழ்கின்றனர்.

இந்த நுண்துகள் கலந்த காற்றை சுவாசிக்கும் போது நுரையீரல் பாதிப்பு மற்றும் பல உடல் உபாதைகள் ஏற்படுகிறது.

அறுவடை முடிந்து வயல்களில் மீதமிருக்கும் கதிர்களை எரிப்பது, வீடுகளில் குப்பையை கொளுத்துவது, டயர்கள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை எரிப்பது, விழாக்களின் போது பட்டாசு, வான வேடிக்கை போன்றவற்றை அதிக அளவு பயன்படுத்துவது என நம் நாட்டில் காற்று மாசு அதிகமாக பல்வேறு காரணங்கள்  உள்ளது.

எனினும், இப்போதாவது விழித்து கொண்டு உலக சுகாதார அமைப்பின் பரிந்துரைக்கு ஏற்ப காற்று மாசுபடுதுவதை குறைத்தால் 240 மில்லியன் மக்களின் சராசரி ஆயுள் 10 வருடங்கள் வரை கூட வாய்ப்புள்ளதாக அந்த ஆய்வில் குறிப்பிடப்பட்ட்டுள்ளது.