Tuesday, December 16, 2025

பண்டிகை கால சலுகை வழங்கும் ஏர் இந்தியா! விமான முன்பதிவுகளில் ரூ.6,000 வரை தள்ளுபடி பெறலாம்!

ஏர் இந்தியா நிறுவனம், HDFC வங்கியுடன் இணைந்து பண்டிகை காலத்தில் பயணிகளுக்கு சிறப்பு தள்ளுபடியை அறிவித்துள்ளது. இந்த சலுகை சர்வதேச மற்றும் உள்நாட்டு விமானப் பயணங்களில் பயணிகளுக்கு சேமிப்பு வாய்ப்புகளை ஏற்படுத்துகிறது.

இந்த பண்டிகை கால சலுகை அக்டோபர் 1 முதல் அக்டோபர் 18, 2025 வரை செய்யப்படும் புக்கிங்க்கு செல்லுபடியாகும். ஏர் இந்தியா வெப்சைட் மற்றும் மொபைல் App வழியாக HDFC பேங்க் கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தி பணம் செலுத்திய பயணிகளுக்கு மட்டுமே இந்த தள்ளுபடி கிடைக்கும்.

ரவுன்ட்-ட்ரிப் சர்வதேச புக்கிங்களில், பிசினஸ் அல்லது ஃபர்ஸ்ட் கிளாஸ் பயணிகளுக்கு அதிகபட்சம் ரூ.6,000 இன்ஸ்டன்ட் டிஸ்கவுன்ட் வழங்கப்படும்.

பிரீமியம் எகானமி பயணிகளுக்கு ரூ.3,000, எகானமி பயணிகளுக்கு ரூ.2,500 தள்ளுபடியும் வழங்கப்படுகிறது. ஒன்-வே இன்டெர்நேஷனல் டிக்கெட்டுகளுக்கு பிசினஸ் அல்லது ஃபர்ஸ்ட் கிளாஸ் பயணிகளுக்கு ரூ.2,000, பிரீமியம் எகானமி பயணிகளுக்கு ரூ.1,500, எகானமி பயணிகளுக்கு ரூ.1,000 தள்ளுபடி வழங்கப்படும்.

உள்நாட்டு விமானங்களுக்கு, ‘HDFCFLY’ ப்ரமோஷன் கோட் பயன்படுத்தினால் எந்த கேபின் கிளாஸ் டிக்கெட்டிலும் ரூ.400 இன்ஸ்டன்ட் டிஸ்கவுன்ட் பெறலாம். இந்த சலுகை ஒரு பயணிக்கு ஒரு முறை மட்டுமே அமல்படும், மற்றும் டிக்கெட்டின் அடிப்படை கட்டணத்தில் மட்டுமே பொருந்தும்.

மொத்தத்தில், உள்நாட்டு விமான பயணிகளுக்கு ரூ.400 முதல் சர்வதேச பயணிகளில் ரூ.6,000 வரை தள்ளுபடி கிடைக்கும். இதன் மூலம் பண்டிகை காலத்தில் விமானப் பயணிகள், குறிப்பாக பிசினஸ் கிளாஸ் பயணிகள் சிறந்த சலுகைகளுடன் பயணம் செய்யலாம்.

Related News

Latest News