திருச்சி விமான நிலையத்தில் சார்ஜாவுக்கு இன்று காலை ஏர் இந்தியா விமானம் புறப்பட தயாராக இருந்தது. இந்த விமானத்தில் 150க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர்.
விமானம் ஓடுபாதைக்குக் கொண்டுவரப்பட்டபோது திடீரென இயந்திரக் கோளாறு ஏற்பட்டிருப்பதை விமானி கண்டறிந்தார். இதையடுத்து விமானம் ஓடுபாதையில் அவசரமாக நிறுத்தப்பட்டு சரி செய்யும் பணி நடைபெற்றது. விமானத்தில் ஏற்பட்ட இயந்திரக் கோளாறை விமானி உடனடியாகக் கண்டறிந்து நடவடிக்கை எடுத்ததால் 150-க்கும் மேற்பட்டோர் நல்வாய்ப்பாக உயிர் தப்பினர்.
இதனால் திருச்சி விமான நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.