சேலம் மாவட்டம் மேச்சேரி பகுதியை சேர்ந்தவர சண்முகம் மூர்த்தி. இவர் தன்னுடைய நிலத்தை அடமானமாக வைத்து கந்துவட்டிக்கு கடன் பெற்றதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் கடன் பெற்ற சண்முக மூர்த்தி முறையாக கடனுக்கான வட்டியை செலுத்தாததால் அவருடைய நிலத்தை எழுதித் தருமாறு மிரட்டி உள்ளனர். சண்முக மூர்த்தி போதிய அவகாசம் கேட்டும் கொடுக்காமல் நேற்று மாலை அதிமுக ஒன்றிய அம்மா பேரவை செயலாளர் ராஜா தலைமையிலான அடியாட்கள் சண்முக மூர்த்தியின் வீட்டில் புகுந்து அடாவடி செய்துள்ளனர்.
அப்போது காருக்குள்ளே இருந்த சண்முக மூர்த்தியை கீழே கவிழ்த்தி விட முயற்சித்த அவர்கள் காரை சேதப்படுத்தி சென்றுள்ளனர். இது தொடர்பாக மேச்சேரி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது. தற்போது அதிமுக பிரமுகர் உருட்டுக்கட்டையுடன் அடியான்களுடன் அடாவடி செய்யும் வீடியோ வெளியாகி உள்ளது.