திருச்சி மாவட்டம் துரையூர் பகுதியில் எடப்பாடி பழனிசாமி பரப்புரையில் ஈடுபட இருந்தார். இதனால் அங்கு முன்னதாகவே அதிமுகவினர் பெருமளவில் சாலையோரம் காத்திருந்தனர்.
அந்த நேரத்தில், ஆத்தூர் சாலையில் விபத்தில் சிக்கிய ஒருவரை மீட்க ஆம்புலன்ஸ் அதிவேகமாக வந்து கொண்டிருந்தது. இதை பார்த்த அதிமுகவினர் ஆம்புலன்ஸ் வாகனத்தை தடுத்து நிறுத்தியுள்ளனர். மேலும் அதிமுகவினர் சிலர் டிரைவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் நிலைமையை சரி செய்து ஆம்புலன்ஸை அனுப்பி வைத்தனர். விபத்தில் காயமடைந்தவர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.