Thursday, December 25, 2025

திருப்பூர் மாநகராட்சியை கண்டித்து அதிமுக மற்றும் பாஜக ஆர்ப்பாட்டம்

திருப்பூரில் கொட்டப்படும் குப்பைகளை மாநகராட்சியினர் சரியான முறையில் அப்புறப்படுத்தவில்லை என கூறப்படுகிறது. மேலும் இப்பகுதியில் வாக்காளர் திருத்த பணியில் ஈடுபடும் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களை தங்களது அதிகாரத்தை பயன்படுத்தி அச்சுறுத்தி வரும் திமுகவினரை மாவட்ட நிர்வாகம் கண்டு கொள்ளவில்லை என கூறப்படுகிறது.

இதனால் இவை அனைத்தையும் கண்டித்து திருப்பூர் குமரன் சிலை முன்பாக அதிமுகவினர் 500க்கும் மேற்பட்டோர் பொள்ளாச்சி ஜெயராமன் தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் பாஜகவுனரும் கலந்து கொண்டு தங்களது எதிர்பை பதிவு செய்தனர்.

Related News

Latest News