கொலைவெறியில் தாக்கிய தேனீக்கள், கோமாவால் பிழைத்த நபர்!

102
Advertisement

அமெரிக்காவில் ஒஹையோ (Ohio) பகுதியை சேர்ந்த, ஆஸ்டின் பெல்லாமி தோட்ட வேலை செய்து கொண்டிருக்கும் போது African Killer வகை தேனீக்கள் இருபதாயிரம் முறைக்கும் மேல் கொட்டியதால் உயிருக்கே ஆபத்தான நிலை ஏற்பட்டுள்ளது.

கடுமையான வலியில் இருந்தும், தேனீக்கள் கொட்டிய பாதிப்பில் இருந்தும் அவரை மீட்பதற்கு, மருத்துவ ரீதியாக தூண்டப்பட்ட கோமா உதவியுள்ளது.

தற்போது வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வரும் ஆஸ்டின், மெல்ல குணமடைந்து வருவதாக அவரின் தாயார் ஷானா தெரிவித்துள்ளார்.

Advertisement

விடாமல் கொட்டும் தன்மை கொண்ட African Killer தேனீக்கள் இதுவரை 1000 மனிதர்களுக்கும் மேல் கொன்றுள்ளது குறிப்பிடத்தக்கது.