ஆப்கானிஸ்தானில் நகங்கர் மாகாணம் ஜலாலாபாத்தை மையமாக கொண்டு 8 கிலோ மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.0 ஆக பதிவானது. நிலநடுக்கத்தால் வீடுகள், கட்டிடங்கள் அதிர்ந்தன. இதனால் அச்சமடைந்த மக்கள் வீதிகளில் தஞ்சம் அடைந்தனர்.
இந்த நிலநடுக்கம் ஏற்பட்ட 20 நிமிடம் கழித்து அதே மாகாணத்தில் குணார் என்ற பகுதியில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.5 ஆக பதிவானது. இதேபோல், மேலும் 3 இடங்களிலும் நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்நிலையில் இந்த நிலநடுக்கத்தில் 500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். சுமார் 1,000 பேர் காயமடைந்துள்ளனர். உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.