Friday, May 9, 2025

வருமானத்துக்கு அதிகமாக சொத்து : அதிமுக எம்.எல்.ஏ வீட்டில் சோதனை

கோவை வடக்கு தொகுதி அதிமுக எம்.எல்.ஏ அம்மன் அர்ஜுனன் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இவர் வருமானத்திற்கு அதிகமாக பணம் சேர்த்ததாக லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. செல்வபுரம் பகுதியில் உள்ள அவரது வீடு உள்ளிட்ட அவருக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை செய்து வருகின்றனர்.

Latest news