2 நிறுவனங்களின் பங்குகளை வாங்கிய அதானி குழுமம்

440

மின்சாரம், சிமெண்ட், சுரங்கங்கள், துறைமுகங்கள் என்று பல துறைகளில் கால் பதித்த அதானிகுழுமம், தற்போது ஏர் ஒர்க்ஸ், ட்ரோன் தொழிலிலும் கால் பதிக்கிறது. அதனால், 2 நிறுவனங்களின் பங்குகளை சமீபத்தில் வாங்கியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

ப்ளூம்பெர்க் பில்லியனர்கள் குறியீட்டின்படி, அதானி குழுமத்தின் தலைவர் கவுதம் அதானியின் சொத்து மதிப்பு சுமார் 102 பில்லியன் டாலர் என்றும், அவர் உலகின் ஏழாவது பணக்காரர் என்றும் கூறியுள்ளது.

அதானி குழுமமானது, இந்தியாவின் ஏழு பெரிய விமான நிலையங்களை இயக்கி வருகிறது.

இந்நிறுவனம் விமானப் பராமரிப்பு, பழுதுபார்ப்பு மற்றும் மறுசீரமைப்பு பணிகளில் முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ளது.

அதன் ஒருபகுதியாக மும்பையில் 71 ஆண்டுகளாக செயல்படும் விமான சேவை நிறுவனமான ஏர் ஒர்க்ஸ் குழுமத்தின் பங்குகளை, அதானி குழுமம் வாங்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

ஏர் ஒர்க்ஸ் குழுமத்தின் வணிகமானது, 27க்கும் மேற்பட்ட நகரங்களில் பரவியுள்ளது.

தற்போது, ​​50க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் இத்துறையில் வேலை செய்கின்றன.

இதுமட்டுமின்றி பெங்களூருவைச் சேர்ந்த ட்ரோன் தயாரிப்பாளரான ஜெனரல் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்தின் 50 சதவீத பங்குகளை அதானி டிஃபென்ஸ் சமீபத்தில் வாங்கியது குறிப்பிடத்தக்கது.