Wednesday, July 30, 2025

”ஷ்ரேயாஸின் 2 குழந்தைகளுக்கு தாயாக வேண்டும்” நடிகை அதிரடி

ஷ்ரேயாஸ் அய்யரின் 2 குழந்தைகளுக்கு தாயாக வேண்டும் என்று, நடிகை ஒருவர் பரபரப்பை கிளப்பி இருக்கிறார். அதுகுறித்து இங்கே பார்க்கலாம்.

நடந்து முடிந்த IPL தொடரில், பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டவர் ஷ்ரேயாஸ் அய்யர். இவரின் தலைமையின் கீழ் அந்த அணி 11 ஆண்டுகளுக்கு பிறகு, இறுதிப்போட்டிக்கு முன்னேறி அசத்தியது. அத்துடன் பாயிண்ட் டேபிளிலும் பஞ்சாப் முதலிடத்தை தக்க வைத்தது.

இதனால் ஷ்ரேயாஸின் ரசிகர்கள் எண்ணிக்கை, தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இந்தநிலையில் இந்தி பிக்பாஸ் போட்டியாளரும், நடிகையுமான Edin Rose தான் ஷ்ரேயாஸை தீவிரமாக காதலிப்பதாக பேட்டி அளித்துள்ளார்.

ஷ்ரேயாஸ் குறித்து Edin, ” நான் ஷ்ரேயாஸ் அய்யரை பைத்தியம் போல காதலிக்கிறேன். அவரின் 2 குழந்தைகளுக்கு தாயாக ஆசைப்படுகிறேன், ” என்று காதலில் உருகி வழிந்துள்ளார். இதற்கு ஷ்ரேயாஸ் தரப்பில் இருந்து இதுவரை பதில் எதுவும் அளிக்கப்படவில்லை.

என்றாலும் 30 வயதாகியும் ஷ்ரேயாஸ் இன்னும் சிங்கிளாக சுற்றித் திரிவதால், அவரின் வருங்கால வாழ்க்கைத்துணை குறித்து அறிந்துகொள்ள, ரசிகர்கள் வெகுவாக ஆர்வம் காட்டி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News
Latest News