கன்னட திரையுலகை சேர்ந்தவர் நடிகை ரன்யா ராவ். இவர் துபாயில் இருந்து பெங்களூருவுக்கு விமானம் மூலம் தங்கம் கடத்தலில் ஈடுபட்டதால் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கிட்டத்தட்ட 12.56 கோடி மதிப்புள்ள 14.2 கிலோ தங்கத்தை பலமுறை தனது விமான பயணத்தின் மூலம் இவர் கடத்தியுள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. ரன்யா ராவின் வீட்டில் வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகள் நடத்திய சோதனையில் ரூ.2.67 கோடி மதிப்புள்ள தங்க நகை, ரொக்கப் பணத்தை அவா்கள் கைப்பற்றினா்.
இந்த நிலையில், செலாவணி பாதுகாப்பு மற்றும் கடத்தல் தடுப்புச் சட்டத்தின் (COFEPOSA) கீழ் ரன்யாவுக்கு ஓராண்டு சிறைத் தண்டனை விதித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தண்டனை காலம் முழுவதும் ஜாமின் கோரும் உரிமை கிடையாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.