குட்டி குழந்தையுடன் கலகலப்பாக பேசிய SK! வைரலாகும் CUTE வீடியோ

178
Advertisement

மடோன் அஷ்வின் இயக்கத்தில் ‘மாவீரன்’ படத்தில் நடித்து வரும் சிவகார்த்திகேயன் அண்மையில் தனது 38வது பிறந்தநாளை கொண்டாடினார். 

இந்நிலையில், ‘கந்தசாமி’, ‘இப்படை வெல்லும்’ படங்களில் நடித்த RJ ரோஹிணியின் மகளுடன் ஷூட்டிங் செட்டில் சிவகார்த்திகேயன் பேசும் காட்சிகள் வெளியாகி கவனம் ஈர்த்துள்ளது.

குழந்தைத் தனமான குசும்போடு பேசி மகிழும் சிவகார்த்திகேயனின் வீடியோவை பகிர்ந்துள்ள RJ ரோஹிணி, SK குழந்தைகளை நன்றாக புரிந்து கொள்பவர் எனவும், தன் குழந்தை அவருடன் சிறப்பான நேரத்தை செலவிட்டதாகவும் குறிப்பிட்டு தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

கலகலப்பாக இருக்கும் இந்த வீடியோ சமூகவலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.