கொரோனா பல தீங்குகள் இழைத்தாலும் சில நன்மைகளையும்
தந்துள்ளது. கொரோனா ஊரடங்கால் சினிமா சூட்டிங் இல்லை.
தியேட்டர்கள் மூடப்பட்டது.
இந்த நேரத்தைப் பயனுள்ளதாக்கிக் கொண்டுள்ளனர் நடிகர்கள்.
அவர்களில் சிவ கார்த்திகேயனும் ஒருவர்.
ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் தனது வீட்டு மாடியில்
தோட்டத்தை உருவாக்கி சாதனை படைத்துள்ளார். மாடித்
தோட்டத்தைப் பார்க்கும்போது விவசாய நிலத்தில் தோட்டத்தை
உருவாக்கியதுபோலுள்ளது.
தங்களின் அன்றாட வீட்டுச் சமையலுக்கு இந்த மாடித்
தோட்டத்திலிருந்தே காய்கனிகளைப் பறித்துப் பயன்
படுத்துவதாகவும் நடிகர் சிவகார்த்திகேயன் கூறியுள்ளார்.
இதுபற்றிய தகவலை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
சிவகார்த்திகேயனைப்போல் அவரது ரசிகர்களும் செய்வார்களா?
சிறக்கட்டும் சிவகார்த்திகேயனின் வேளாண்மைப் பணி.