Tuesday, April 22, 2025

“இந்த படத்தை ட்ரோல் செஞ்சா அவ்ளோதான்” – படக்குழு எச்சரிக்கை

முகேஷ் குமார் சிங் இயக்கத்தில் விஷ்ணு மஞ்சு முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம் ‘கண்ணப்பா’. இந்தப் படத்தில் மோகன்பாபு, சரத்குமார், கருணாஸ், பிரீத்தி முகுந்தன், ரகு பாபு உள்ளிட்ட ஏராளமானோர் நடித்துள்ளனர். படத்துக்கு ஸ்டீஃபன் தேவஸி இசையமைத்துள்ளார். இந்தப் படம் வரும் ஏப்ரல் 25-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

இந்தப் படம் தொடர்பாக சில ட்ரோல் மீம்கள் சமூக வலைதளங்களில் வைரலாகின. இது தொடர்பாக படக்குழுவினரிடம் கேட்டபோது, அதற்கு பதிலளித்த நடிகர் ரகு பாபு, “இந்தப் படத்தை யார் ட்ரோல் செய்தாலும், அவர் எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும், கடவுள் சிவனின் கோபத்துக்கு ஆளாவார் என பேசியுள்ளார். நடிகர் ரகு பாபுவின் பேச்சு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Latest news