‘அப்ப உங்களுக்கு என்ன வயசாச்சுன்னு கேப்பீங்க’ திடீரென உணர்ச்சிவசப்பட்ட கமல்

40
Advertisement

மெட்ராஸ் கிறிஸ்தவக் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவருமான கமல் ஹாசன் கலந்து கொண்டு மாணவர்கள் மத்தியில் உரையாற்றியுள்ளார்.

அப்போது இந்தியர்களின் சராசரி வயதிற்கும் பாராளுமன்ற உறுப்பினர்களின் சராசரி வயதிற்குமான வித்தியாசம் பெரியது என பேசினார்.

பின், இந்த வித்தியாசம் களையப்பட வேண்டும் என கூறிய அவர் மூத்தோர்களை ஒதுக்கிவிட்டு, இளைய தலைமுறையினர் இந்த நாட்டின் தலைவிதியை நிர்ணயிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

Advertisement

மேலும், ‘அப்ப உங்களுக்கு என்ன வயசாச்சுன்னு கேப்பீங்க’ என்ற கமல், நீங்கள் நாட்டை வழிநடத்த பொறுப்பெடுத்து கொண்டால் நான் ஓய்வுபெறத் தயார் என நெகிழ்ச்சியுடன் பேசிய வீடியோ சமூகவலைதளங்களில் கவனம் ஈர்த்து வருகிறது.