கணக்குப் போடும் மீன்கள்

270
Advertisement

மீன்கள் கணக்குப் போடுகிறதா? ஆச்சரியமாக இருக்கிறதா…?
உண்மைதான் என்கிறது விஞ்ஞானிகள் குழு.

ஆம், மீன்களுக்குக் கணக்குப் போடும் திறன் இருப்பதாகக்
கண்டறியப்பட்டுள்ளது.

பொதுவாக, அனைவருக்குமே கணக்குப் போடுவதென்றால் சற்று
தயக்கமாகத்தான் இருக்கும். அதிலும் மாணவர்களுக்கு கணக்கு
என்றாலே வேப்பங்காயாக கசக்கும். அதனால், கணிதப் பாடம்
இல்லாத வேறு பாடப்பிரிவுகளைத் தேர்ந்தெடுத்துப் படிப்பது
அநேக மாணவர்களின் வழக்கம்.

இந்த நிலையில், மீன்களின் கணிதத் திறன் எல்லாரையும்
வியப்பில் ஆழ்த்தியுள்ளது. மீன்களுக்குக் கணிதத் திறன்
இருக்கிறதா என்பதைக் கண்டறிய விலங்கியல் துறை
நிபுணர்கள் விரும்பினர்.

அதைத் தொடர்ந்து ஜெர்மனியிலுள்ள பான் பல்கலைக்
கழகத்தின் விலங்கியல் பிரிவைச் சேர்ந்த பேராசிரியர்
டாக்டர் வேரா ஸ்க்லூசெல் தலைமையிலான விஞ்ஞானிகள்
குழு மீன்களுக்குக் கணிதத் திறன் இருப்பதை சில
ஆண்டுகளுக்குமுன்பு கண்டறிந்துள்ளது.

சிக்லிட் மற்றும் வால் திருக்கை மீன்கள் ஒன்றுமுதல்
ஐந்துவரையிலான கூட்டல், கழித்தல் ஆகியவற்றைச்
செய்வதாக விஞ்ஞானிகள் கண்டுபிடித்துக் கூறியுள்ளனர்.
இதில் சிக்லிட் மீன்கள் வீட்டில் தொட்டிகளில் அலங்காரத்துக்காக
வளர்க்கப்படும் இனமாகும்.

வால் திருக்கை மீன்கள் கடலின் ஆழத்தில் வசிப்பவை ஆகும்.

இவ்விரண்டு மீன்களுக்கும் அந்த விஞ்ஞானிகள் குழு பயிற்சி
அளித்துள்ளது. அதன் அடிப்படையில் அவை எளிய கூட்டல்,
கழித்தல் கணக்குகளைச் செய்துள்ளன.

மீன்களுக்குக் கணிதத்திறன் இருப்பது அனைவரையும்
ஆச்சரியத்தில் மூழ்கவைத்துள்ளது.