தினமும் ஏ.பி.சி. (ஆப்பிள், பீட்ரூட், கேரட்) ஜூஸ் குடிப்பது பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை தருகிறது. இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்யும் சத்துக்கள் உள்ளன. ஆப்பிள் மற்றும் கேரட்டில் வைட்டமின் சி உள்ளதால், ரத்த வெள்ளை அணுக்களின் உற்பத்தியை அதிகரிக்க செய்யும்.
பீட்ரூட்டில் இரும்பு, பீட்டா கரோட்டின் போன்ற தாதுக்கள் உடல் ஆக்சிஜன் சுழற்சியை மேம்படுத்தி நோய் எதிர்ப்பு திறனை அதிகரிக்கின்றன. இதில் உள்ள பீட்டாலைன் நிறம் காரணமாக, பீட்ரூட் இயற்கையான நச்சுநீக்கி ஆக செயல்பட்டு கல்லீரல் மற்றும் உடலில் உள்ள நச்சுக்களை நீக்க உதவுகிறது.
ஆப்பிள், கேரட் ஆகியவற்றில் உள்ள நார்ச்சத்து செரிமானத்தை மேம்படுத்தும். மேலும் உடலில் உள்ள நச்சுக்கள் விரைவாக வெளியேறும். குடலில் நல்ல பாக்டீரியாக்களை ஊக்குவித்து மலச்சிக்கல், வயிறு வீக்கம் போன்ற பிரச்சனைகளை குறைக்கும் தன்மை ஏ.பி.சி. ஜூஸுக்கு உண்டு.
இந்த ஜூஸ் இயற்கையாகவே சருமத்திற்கு அழகும், பளபளப்பும் சேர்க்கக்கூடியது. உடல் எடையை குறைக்க விரும்புபவர்களுக்கு ஏ.பி.சி. ஜூஸ் நலன் தேர்வாக அமையும். இதிலிருக்கும் நார்ச்சத்து வயிறு நிரம்பிய உணர்வை தரும். இதனால் தேவையற்ற நொறுக்குத்தீனிகளை சாப்பிடுவதை தடுக்கும்.