கொண்டையில் பாம்பைக்கொண்டு முடிச்சு போட்ட பெண்மணி

338
Advertisement

https://www.instagram.com/tv/CWlovFmDv75/?utm_source=ig_web_copy_link

தலைமுடியைப் பாம்பைக்கொண்டு முடிச்சு போட்ட பெண்ணின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

கொண்டை போடுவதற்கு கிராப்புறப் பெண்கள் பெரும்பாலும் ரிப்பனைத்தான் காலங்காலமாகப் பயன்படுத்தி வருகின்றனர். அதன்தொடர்ச்சியாக ரப்பர் பேண்டுகளைப் பயன்படுத்தத் தொடங்கினர். இந்த வீரப்பெண்மணியோ பாம்பையே ரிப்பனாகப் பயன்படுத்தியுள்ளதைக்கண்டு பெண்கள் மட்டுமன்றி, ஆண்களும் மிரட்சியோடு உள்ளனர்.

Snake World என்னும் பெயரில் இன்ஸ்டாகிராம் வலைத்தளக் கணக்கு நடத்திவரும் ஒரு பெண்தான், இந்தத் துணிகரச் செயலில் ஈடுபட்டுள்ளார்.

இவர், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பலவிதப் பாம்புகளின் வீடியோக்களைப் பதிவிட்டுள்ளார். அந்த வகையில், தனது தலைமுடியை அள்ளிமுடிந்து அதனைக் கட்டுவதற்கு ஹேர்பேன்டுக்குப் பதிலாகப் பாம்பைப் பயன்படுத்தி முடிச்சுபோட்ட வீடியோவையும் பதிவேற்றியுள்ளார்.

அத்துடன் அவர் நிற்கவில்லை, பாம்புக்கொண்டையோடு வணிக வளாகம் ஒன்றுக்குள் செல்கிறார். அங்கிருந்த ஒருவர் அந்தப் பெண்மணியைப் படம்பிடிக்கத் தொடங்கியபோது, வணிக வளாகத்தை வலம்வரத் தொடங்குகிறார். வணிக வளாகத்தில் உள்ள பலர் அப்பெண்ணைக் கவனிக்காததால், அலட்டிக்கொள்ளாமல் சுதந்திரமாக நடமாடுகிறார்.

இந்த தைரியப் பெண்மணி எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்பது தெரியவில்லை.