ஒரு பெண் தொடர்ந்து 40 ஆண்டுகளாக இரவிலும் பகலிலும்
உறங்காமல் வாழ்ந்து வருகிறார். இந்தச் செய்தி சமூக வலைத்தளங்களில்
வைரலாகி வருகிறது.
தொடர்ந்து மூன்று நாட்கள் உறங்காமல் இருந்தாலே நினைவாற்றல்
குறையத் தொடங்கிவிடும் என்கிறார்கள் மருத்துவர்கள். ஆனால்,
இப்பெண் சிறந்த நினைவாற்றலுடன் வாழ்ந்து வருகிறார்.
லி ஜானிங் என்னும் அந்தப் பெண் சீனாவின் ஹெனான்
மாகாணத்தில் வாழ்ந்து வருகிறார். 5 வயதுவரை நன்றாகத்
தூங்கியுள்ளார். அதன்பிறகு தூக்கம் வரவேயில்லையாம்…
தங்களை ஏமாற்றுவதற்காக லி ஜானிங் பொய் சொல்கிறார்
எனக் கருதிய கிராம மக்கள் அவருடன் இரவில் விளையாடத்
தொடங்கியுள்ளனர். ஆனால், கிராமவாசிகளால் நீண்டநேரம்
விழித்திருக்க முடியாமல் தூங்கிவிட்டனர்.
லி ஜானிங்கோ விடியவிடிய விழித்திருந்திருக்கிறார்.
இவரது கணவரோ தூக்க மாத்திரை வாங்கிக் கொடுத்திருக்கிறார்.
ஆனாலும், லி ஜானிங்கிற்கு உறக்கம் வரவில்லை.
இரவு முழுவதும் வீட்டை சுத்தம் செய்வதில் நேரத்தைக் கழித்துள்ளார்.
லி ஜானிங் இரவிலும் தூங்காமலிருப்பதற்கான காரணத்தை
மருத்துவர்களால்கூடக் கண்டறிய முடியவில்லையாம்.