Wednesday, December 11, 2024

52 வயதில் 12 ஆவது திருமணத்துக்கு வரன் தேடும் பெண்

52 வயதுப் பெண்ணொருத்தி 12 ஆவது திருமணத்துக்கு வரன் தேடிவருவது சமூக ஊடகத்தில் வைரலாகியுள்ளது.

அமெரிக்காவைச் சேர்ந்தவர் மொனட் டயஸ். சமீபத்தில் டிவி நிகழ்ச்சி ஒன்றில் தனது திருமண அனுபவங்களைப் பகிர்ந்துள்ளார் மொனட். அதில் தன்னை பையன் பைத்தியம் என்று வர்ணித்துள்ளதுடன், நான் வேகமாகக் காதலிக்கிறேன் என்றும் தெரிவித்துள்ளார்.

தனக்கு 2 வயதுமுதலே ஆண்கள்மீது ஈர்ப்பு வந்துவிட்டதாகக் கூறிய மொனட்டுக்கு சிறுவயதுமுதலே தீராதத் திருமண ஆசை இருந்துள்ளது. சகோதரனின் நண்பர்களைப் பார்க்கும்போதெல்லாம் அவர்களைத் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்னும் ஆசை தோன்றியுள்ளது.

அதன்விளைவாகத் தனது பள்ளிப் படிப்பை நிறைவுசெய்தவுடன், தனது திருமண ஆசையை நிறைவேற்றிக் கொண்டார். இதுவரை 11 முறைத் திருமணம் செய்துள்ள அவர் தற்போது 12 ஆவது திருமணத்துக்கு மாப்பிள்ளை தேடிக்கொண்டிருக்கிறார்.

இதுபற்றிக் கூறியபோது, எனது படத்தில் நடிப்பதற்கு நடிகரைத் தேடிக்கொண்டிருக்கிறேன் என்று நகைச்சுவையாகத் தெரிவித்துள்ளார்.

52 வயதாகும் மொனட், 57 வயதாகும் நபரோடு தற்போது டேட்டிங்கில் உள்ளார்.
இதில்,விநோதம் என்னவென்றால், இந்த நபரை ஏற்கெனவே 2 முறைத் திருமணம் செய்து விவாக ரத்து செய்துள்ளார். தற்போது மூன்றாவது முறையாகத் திருமணம் செய்யவுள்ள இந்த முன்னாள் கணவருடன் கடந்த 2 வருடங்களாக நட்பில் உள்ளாராம்.

மேலும், தனது முன்னாள் கணவர்களைப் பற்றிக்கூறிப் பிரம்மிக்க வைக்கிறார் மொனட்.

5 ஆவது கணவர்தான் சிறந்த கணவர், 6 ஆவது கணவருக்கு நல்ல குணம். அதனாலேயே 2 முறை 5 ஆவது கணவரைத் திருமணம் செய்துள்ளதாகக் கூறிய மொனட் 8 ஆவது கணவரை ஆன்லைனில் பேசியே கவர் செய்துவிட்டாராம் இந்தக் கல்யாண ராணி. 10 ஆவது கணவர் பள்ளிக்கால நண்பராம்….

பலமுறைத் திருமணம் செய்துள்ளதால், மொனட்டின் கணவர்களைக் கண்காணிக்க அவளது குடும்பத்தில் உள்ளவர்கள் சிரமப்படுகின்றனராம்….

பாவம் 90ஸ் கிட்ஸ்-….

Latest news
Related news

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!