இந்த ரெயிலில் ஒரு டிக்கெட் ரூ 10 லட்சமா… அப்படி அந்த ரயிலில்என்ன இருக்கும்…?

22
Advertisement

ஒரு ரயிலில் ஒரு டிக்கெட் ரூ 10 லட்சத்திற்கு விற்பனை செய்யப்படுகிறது.

அப்படி இந்த ரயிலில் என்னதான் இருக்கிறது என்பதை பார்ப்போம். இத்தனை நீளமான ரயிலில் பயணிப்பது ரயில் தண்டவாளம் மாறும் போது அது திரும்பும் அழகை மற்ற பெட்டிகளில் அமர்ந்து கொண்டு நாமே ரசிபப்தும் வியக்கத்தக்கதாகும். உயிருக்கு ஆபத்து என்றாலும் ரயிலில் தொங்கிக் கொண்டே போக சிலருக்கு பிடிக்கும்.

இப்படி சொகுசு வசதிகள் கொண்ட ரயில் நிறைய உள்ளன. அவற்றில் Palace on Wheels என்ற ரயில் குறித்து பார்ப்போம். இந்த ரயிலில் 8 நாட்கள் முதல் 13 நாட்கள் வரை பயணம் செய்யலாம். இதற்கு கட்டணமாக ரூ 1 லட்சம் முதல் ரூ 5 லட்சம் வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. டெல்லி, ஜெய்ப்பூர், உதய்பூர், ஸ்வாய், மோத்பூர், சித்தூர்கர், ஜெய்சால்மர், ஜோத்பூர், பாரத்பூர், ஆக்ரா வழியாக இந்த ரயில் மீண்டும் டெல்லியை அடைகிறது. இந்த ரயில் ராஜஸ்தான் மாநிலத்தில் பெரும்பாலும் பயணிக்கிறது.

அது போல் மகாராஜா எக்ஸ்பிரஸ் என ஒன்று உள்ளது. இங்கு நாம் தேர்வு செய்யும் வழித்தடத்தை பொருத்து கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இரண்டே முக்கால் லட்சம் முதல் 10 லட்சம் வரை கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த ரயில் தாஜ்மஹால், கஜுரஹோ,பதேபூர் சிக்ரி, வாரணாசி உள்ளிட்ட சுற்றுலா தலங்களுக்கு அழைத்து செல்கிறது.இதில் 23 கோச்சுகள் உள்ளன.

88 பேர் வரை பயணம் செய்யலாம். இங்கு இரு ரெஸ்டாரண்டுகள் உள்ளன. 8 பகல், 7 இரவு பயணிக்கும் கோல்டன் சேரியட் ரயில் தென் மாநிலங்களில் முக்கிய சுற்றுலா தலங்களுக்கு செல்கிறது. இதற்கு இரு வழித்தடங்கள் உள்ளன. அந்த வகையில் ஒரு வழித்தடம் சென்னை, மாமல்லபுரம், புதுவை, திருச்சி, தஞ்சை, மதுரை உள்ளிட்ட பகுதிகளை அழைத்து செல்லும்.