Tuesday, December 3, 2024

2 வீலரில் சென்றவர்களை ஓடிவந்து தாக்கிய பாறை

இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தபோது மலைச்சரிவிலிருந்து
உருண்டுவந்த பாறை மோதியதில் ஒருவர் உயிரிழந்தார்.

இந்த அதிர்ச்சி சம்பவம் கேரளாவில் நிகழ்ந்துள்ளது. அண்மையில் தாமரசேரிப்
பகுதியில் மலைப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சாலையில் இரண்டு இளைஞர்கள்
இரு சக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தனர். வளைந்து வளைந்து செல்லும்
அந்த சாலையில், தன்னிலை மறந்து ஆனந்தமாக அவர்கள் பயணித்துக்கொண்டிருந்தனர்.

அப்போது எதிர்பாராத விதமாக மலையிலிருந்து ஒரு பாறாங்கல் வேகமாக உருண்டு
வந்துகொண்டிருந்தது. அதனைக் கவனிக்காமல் அவர்கள் சென்றுகொண்டிருந்தனர்.
சட்டென்று அந்தப் பாறாங்கல் அவர்கள்மீது மோதியது- இதில் நிலைகுலைந்த பைக்
ஓட்டுநர் இடப்புறத்திலுள்ள பள்ளத்தாக்கில் விழுந்து பரிதாபகரமாக உயிரிழந்தார்.

இந்த சம்பவம் அவருக்குப் பின்னால் மற்றொரு டூ வீலரில் வந்துகொண்டிருந்த
இளைஞர்களின் கேமராவில் பதிவாகியுள்ளது.

பாறாங்கல் மோதி உயிரிழந்த அந்த இளைஞர் மலப்புரம் பகுதியைச் சேர்ந்த 20 வயது
இளைஞர் என்பது பின்னர் தெரியவந்தது.

பயங்கர விபத்தின் இந்த அதிர்ச்சிக் காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில்
வைரலாகி வருகின்றன. சாலையில் வாகனங்களில் செல்லும்போது எவ்வளவுதான்
கவனமாகச் சென்றாலும், இயற்கையின் செயலால் இதுபோன்ற விபத்துகள் கடும்
பாதிப்பையும் சோகத்தையும் ஏற்படுத்திவிடுகின்றன.

Latest news
Related news

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!