சமையல் எண்ணெயில் பறந்த விமானம்

370
Advertisement

பெட்ரோலுக்குப் பதிலாக சமையல் எண்ணெயில் விமானம் பறந்து அனைவரையும்
ஆச்சரியத்தில் அண்ணாந்து பார்க்க வைத்துள்ளது.

சமையல் எண்ணெயிலிருந்து தயாரிக்கப்பட்ட எரிபொருளில் அந்த விமானம் 3 மணி நேரம்
பறந்துள்ளது. ஏர்பஸ் 380 விமான நிறுவனம் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளது. சோதனைப்
பயணம் வெற்றிகரமாக நடந்துள்ளது.

மார்ச் 25 ஆம் தேதி துலுசின் பினாக்னாக் விமான நிலையத்திலிருந்து 3 மணி நேரம் பறந்துள்ளது.
இந்த பன்னாட்டு விமான நிலையம் பிரான்ஸ் அருகே உள்ளது.

முதல் சோதனை வெற்றிகரமாக நடந்த நிலையில், மார்ச் 29 ஆம் தேதி இரண்டாவது சோதனைப்
பயணத்தின்போது துலுசிலிருந்து நைசுக்கு வெற்றிகரமாகப் பறந்துள்ளது.

சமையல் எண்ணெய் மற்றும் கழிவுக் கொழுப்புகளிலிருந்து தயாரிக்கப்பட்டுள்ள இந்த எரிபொருளுக்கு
SAF என்று பெயரிடப்பட்டுள்ளது. பிரான்ஸ் நாட்டிலுள்ள Total Energies என்ற நிறுவனம் இந்த
எரிபொருளைத் தயாரித்து வழங்கியுள்ளது.

2035 ஆம் ஆண்டு இந்த வகை விமானங்கள் முழுமையான பயன்பாட்டுக்கு வரவுள்ளதாக ஏர்பஸ் 380
விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.

SAF வகை எரிபொருள் பயன்படுத்துவதால் 53 சதவிகிதத்திலிருந்து 71 சதவிகிதம் வரை கார்பன்
உமிழ்வு குறைந்துவிடும் என்று அந்நிறுவனம் கூறியுள்ளது.

பெட்ரோல் உற்பத்தி உலகளவில் குறைந்து வரும் நிலையிலும், நாளுக்கு நாள் பெட்ரோல் விலை
அதிகரித்துவரும் சூழ்நிலையிலும், காற்று மாசு அதிகரித்துவரும் நிலையிலும் இந்த SAF வகை
எரிபொருள் வரப்பிரசாதமாக அமைந்துள்ளது.