நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதுதொடர்பாக விசாரணை நடத்திய போலீசார் தந்தை பெரியார் திராவிட கழகத்தைச் சேர்ந்த 10 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
பெரியார் குறித்து சீமான் பேசியதை கண்டித்து தந்தை பெரியார் திராவிட கழகத்தினர் மற்றும் பெரியார் ஆதரவு அமைப்புகள் தொடர்ந்து போராட்டம் நடத்தினர்.
ஏற்கனவே சீமான் மீது நடிகை விஜயலட்சுமி தொடர்ந்த வழக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ள நிலையில் சீமான் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச திட்டமிட்டுள்ளதாக வெளியான தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.