Tuesday, June 17, 2025

திமுக கூட்டணியில் உள்ள ஒரு கட்சி பாஜகவுக்கு வர தயாராக உள்ளது – எல்.முருகன் பேட்டி

2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அனைத்து கட்சிகளும் தேர்தல் வேலைகளை ஆரம்பித்து விட்டது. இந்நிலையில், நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் சண்முகம், “2026 சட்டமன்ற தேர்தலில் கூடுதல் தொகுதிகளை திமுக ஒதுக்கவேண்டும்” என்று கோரிக்கை விடுத்தார். இது திமுக கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியது.

இதையடுத்து மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் செய்தியாளர்களிடம் கூறியதாவது : திமுக கூட்டணியில் உள்ள ஒரு கட்சி பாஜகவுக்கு வர தயாராக உள்ளது என கூறியுள்ளார். இன்னும் 3 மாதங்களுக்குள் பாஜக கூட்டணி விரிவடையும். இதற்காக அந்த கட்சியுடன் பாஜக பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது என கூறியுள்ளார்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Latest news