Sunday, December 28, 2025

குழந்தையின் உணவுக் குழாயில் சிக்கிய உலோக டாலர்!! அறுவை சிகிச்சை இன்றி அகற்றி அரசு மருத்துவர்கள் சாதனை..

திருச்சி ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த 3 வயது ஆண் குழந்தை, கடந்த 5 அன்று இரவு 10 மணிக்கு தற்செயலாக உலோகத்தால் ஆன ஒரு பொருளை (சங்கிலி டாலர்) விழுங்கியதாக சொல்லப்படுகிறது.

இந்த நிலையில், மறுநாள் காலை (6/10/25) பெற்றோருக்கு அந்தப் பொருள் விழுங்கியது தெரியவந்தது. குழந்தை திருச்சி மகாத்மா காந்தி நினைவு மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவுக்கு கொண்டு வரப்பட்டது. மருத்துவ பரிசோதனையில் நோயாளிக்கு குடலில் துளை அல்லது அடைப்புக்கான எந்த அறிகுறியும் காணப்படவில்லை. மேலும், X-ray எடுக்கப்பட்டதில்,அந்த பொருள் உணவுக்குழாயில் சிக்கியிருப்பது கண்டறியப்பட்டது.

இதனையடுத்து, இரைப்பை, குடல் நிபுணரிடம் ஆலோசனை பெறப்பட்டு, காலை 11.30
மணியளவில், எண்டோஸ்கோபி திட்டமிடப்பட்டு, உடனடியாக, எண்டோஸ்கோபி மூலம், மயக்க மருந்து அல்லது அறுவை சிகிச்சை இல்லாமல் டாலர் முழுவதுமாக அகற்றப்பட்டது. செயல்முறைக்குப் பின்னர் குழந்தை மருத்துவ ரீதியாக நலம் பெற்று கண்காணிப்பில் வைக்கப்பட்டது.

சில மணி நேரம் கழித்து, குழந்தையின் உடல்நிலை நன்றாக இருந்தது, பின்னர் வாய்வழி உணவை உட்கொள்ள அனுமதிக்கப்பட்டது. அறுவை சிகிச்சை மூலம் அந்தப் பொருளை அகற்ற முடியும் என்ற போதிலும், மருத்துவர்கள் குழந்தையின் உயிரைக் காப்பாற்ற குறைந்தபட்ச ஊடுருவும் எண்டோஸ்கோபி முறையை மேற்கொண்டனர்.

மருத்துவமனை டீன், பேராசிரியர் டாக்டர் எஸ். குமாரவேல் எம்எஸ் (ORTHO) மற்றும் மருத்துவ கண்காணிப்பாளர் பேராசிரியர் டாக்டர் உதயா அருணா எம்எஸ் (OG) ஆகியோரின் ஆலோசனையின் பேரில், அவசர சிகிச்சை குழு தலைவர் பேராசிரியர் டாக்டர் ஆர் ஆர் கண்ணன் எம்சிஎச் (GASTRO) தலைமையில் எண்டோஸ்கோபி செயல்முறையில் டாக்டர் கிஷ்வந்த் டிஎம் (GASTRO)வால் எந்த தாமதமும் இன்றி எடுக்கப்பட்டது.

உணவுக் குழாயில் சங்கிலி டாலர் சிக்கிய 3 வயது குழந்தையை மருத்துவர்களால் எந்த தாமதமும் இன்றி அறுவை சிகிச்சையோ அல்லது மயக்க மருந்தோ இல்லாமல் எடுக்கப்பட்டு குழந்தை காப்பாற்றியதால் மருத்துவர்களுக்கு பாராட்டு மழை குவிந்து வருகிறது.

Related News

Latest News