செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கத்தில் இருந்து எலப்பாக்கம் செல்லும் சாலையில் பள்ளிப்பேட்டை என்ற இடத்தில் 4401 என் கொண்ட அரசு மதுபான கடை செயல்பட்டு வருகிறது. இந்த அரசு மதுபான கடையில் ஒரு மது பாட்டிலுக்கு பத்து ரூபாய் கட்டாய வசூல் செய்வதாக மது பிரியர்கள் தொடர்ந்து குற்றம் சாட்டு வைத்து வருகின்றனர்.
தற்பொழுது தமிழக அரசு அரசு மதுபான கடைகளில் ஸ்கேனில் முறையில் பணம் செலுத்தும் நடைமுறை தற்பொழுது உள்ள நிலையிலும் இந்த அரசு மதுபான கடையில் கூடுதலாக பத்து ரூபாய் கட்டாய வசூல் செய்யப்படுவதாக மது பிரியர்கள் குற்றம் சாட்டுகின்றனர். எனவே இது போன்று கட்டாய வசூல் செய்யும் அரசு மதுபான கடைகள் மீது மாவட்ட டாஸ்மார்க் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மது பிரியர்கள் சமூக வலைதளங்களில் வீடியோ பதிவிட்டுள்ளனர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.