மடத்துக்குளம் போலீஸ் கஸ்டடியில் இருந்து தப்பி ஓடிய இருசக்கர வாகனம் திருடனை, தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் அருகே இருசக்கர வாகனத்தை திருட முயன்ற 2 பேரை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். இருசக்கர வாகனம் திருட முயன்றவர்கள், மடத்துக்குளம் பகுதியை சேர்ந்த முருகானந்தம், சூர்யா என்பது விசாரணையில் தெரியவந்தது. அதனையடுத்து, முருகானந்தம், சூர்யா இருவரையும் போலீசார் கைது செய்து வழக்குப்பதிவு செய்தனர்.
இந்நிலையில், போலீஸ் கஸ்டடியில் இருந்த முருகானந்தம் திடீரென தப்பி ஓடினார். அவரை அப்பகுதி முழுவதும் தேடியும் கிடைக்கவில்லை. இதனால், போலீசார் தனிப்படைகள் அமைத்து தப்பி ஓடிய முருகானந்தத்தை தீவிரமாக தேடி வருகின்றனர்.