தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதையடுத்து தமிழகத்துக்கு நாளையும் நாளை மறுநாளும் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 2 நாட்களில் தமிழக கடற்கரையை நோக்கி நகரக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடலோர மாவட்டங்களில் மழை பெய்யும் என்றும், குறிப்பாக, காவிரி டெல்டா மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.