உலகை உலுக்கிய புகைப்படங்கள்

181
Advertisement

வரலாற்று நிகழ்வுகளையும் கால சூழல்களையும் உறைய வைக்கும் சக்தி ஒரு புகைப்படத்திற்கு உண்டு.

மனித குலத்தின் அசாத்திய வளர்ச்சியை, முன்னேற்றங்களை பறைசாற்ற, போர், ஒடுக்குமுறை போன்ற அவல நிலையின் வலிகளை வெளிப்படுத்த என அடுத்த தலைமுறையினருக்காக புகைப்படங்கள் ஆவணபடுத்தியுள்ள வரலாற்று சுவடுகள் ஏராளம்.  அதில் உலகை திரும்பி பார்க்க வைத்த சில புகைப்படங்களை பற்றி இத்தொகுப்பில் காண்போம்.

1945 ஆம் ஆண்டு, இரண்டாம் உலகப்போரில் ஜப்பான் சரணடைந்த அன்று ஒரு அமெரிக்க ராணுவ வீரர் சாலையில் சென்ற ஒரு பெண்ணை முத்தமிடும் The Kiss என்ற புகைப்படம், போரின் வலி நீங்கிய மகிழ்ச்சி, பொங்கி வழியும் காதல் என எண்ணற்ற உணர்வுகளை கண்முன் காட்சிப்படுத்தியது.

1936ஆம் ஆண்டு, உலகளாவிய பொருளாதார முடக்கத்தின் போது, நம்பிக்கையற்ற நிலையில் தனது குழந்தைகளுடன் அமர்ந்திருக்கும் ஒரு புலம்பெயர்ந்த தாயின் வேதனையை பதிவு செய்த ‘The Migrant Mother’ என்ற புகைப்படம், வறுமையின் தீவிரத்தை உணர்த்தியதுடன் சம்பந்தப்பட்ட பெண்ணுக்கு அரசிடம் இருந்து நிவாரணம் கிடைக்க வழி செய்தது.

1969ஆம் ஆண்டு, ஜூன் 20ஆம் தேதி நீல் ஆர்ம்ஸ்ட்ராங் விண்வெளி வீரர் Buzz Aldrinஐ, நிலவின் மீது வைத்து எடுத்த புகைப்படம் மனிதனின் சாதனையை வரலாற்றில் பொரித்தது.

மேலும், பார்வையில்லாதவர்களின் வலியை காட்டும் ‘Blind’, விண்ணில் இருந்து எடுக்கப்பட்ட ‘Earthrise’ என்னும் பூமியின் புகைப்படம், அகதிகளின் போராட்டத்தை சுட்டிக்காட்டும் ‘Afghan Girl’, புகைப்பட கலையின் நுணுக்கத்தை காட்டும் வகையில் ஒரு பால் துளி விழுந்து சிதறுவதை படம் பிடித்த ‘Milk Drop Coronet’ துவங்கி சிரிய நாட்டு போரில் நீரில் மூழ்கி இறந்த ஆலன் குர்டி என்ற சிறுவனின் புகைப்படம் மற்றும் இந்தியாவில் covid இறப்புகளால் ஓயாமல் எரியும் மயானத்தை பதிவு செய்ததற்காக புலிட்ஸர் பரிசு பெற்றது வரை வரலாறு, சமூகநீதி, எதிர்ப்பு, காதல், வலி, வறுமை என மனித வாழ்க்கையின் முக்கிய பரிணாமங்களுடன் பயணித்து வரும் புகைப்பட கலையை, புகைப்பட தினமான இன்று நினைவுகூறுவோம்.