ஒரு லட்ச ரூபாய்க்கு ஏலம்போன ஒரு கிலோ தேயிலை

243
Advertisement

ஒரு கிலோ தேயிலை ஒரு லட்ச ரூபாய்க்கு ஏலம்போன தகவல் தேநீர்ப் பிரியர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

இந்தியாவைப் பொருத்தவரை, அஸ்ஸாம் மாநிலத்தில் விளையும் தேயிலை மிகவும் தரமானதாக உள்ளது. அதனால் இங்கு விளையும் தேயிலையின் விலையும் அதிகமாக உள்ளது.

அந்த வகையில், கவுகாத்தி தேயிலை ஏல மையத்தில் அரிய வகைத் தேயிலையான மனோஹரி என்னும் ரகம் அதிக விலைக்கு விற்பனையாகியுள்ளது.

மனோஹரி கோல்டு என்னும் பெயரில் இந்தத் தேயிலை உலகம் முழுவதும் பிரபலமாக உள்ளது.

இந்தத் தேயிலையில் சிடிசி டீ, ஸ்பெஷல் டீ, ஒயிட் டீ, கிரீன் டீ, எல்லோ டீ, ஊலாங் டீ என இந்த மனோஹரி தேயிலையில் பல விதங்களாகத் தயாரித்து சந்தைக்கு அனுப்பத் திட்டமிட்டுள்ளனர்.