Thursday, July 31, 2025

திருப்பூரில் பள்ளத்தில் கவிழ்ந்த அரசு பேருந்து

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே, சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து அரசு பேருந்து விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

தாராபுரம், கோட்டப்பாளையத்தில் இருந்து பல்லடம் நோக்கி பயணிகளுடன் சென்று கொண்டிருந்த அரசு பேருந்து, பனப்பாளையம் பகுதியில் விபத்துக்குள்ளானது. முன்னால் சென்று கொண்டிருந்த கார், எரிவாயு நிரப்புவதற்காக திடீரென சாலையில் திரும்பியதாக கூறப்படுகிறது. இதனால், ஓட்டுநரின் கட்டுபாட்டை இழந்த அரசு பேருந்து தாறுமாறாக இயங்கி இருக்கிறது.

இந்நிலையில், எதிரே சென்ற லாரி மீது மோதாமலிருக்க இடது புறம் இருந்த பள்ளத்தில் ஓட்டுநர் பேருந்தை இறக்கியுள்ளார். ஓட்டுநரின் இந்த சாதுர்ய நடவடிக்கையால் பேருந்துக்குள் இருந்த பயணிகள் காயமின்றி தப்பிய நிலையில், விபத்து குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News
Latest News